திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனின் வயிற்றில் ஆணிகள், நகவெட்டி, ஹேர்பின், செயின் மற்றும் 23 நாணயங்கள் உள்பட குறைந்தது 40 பொருட்கள் இருந்துள்ளன என மருத்துவர் தெரிவித்தார். அச்சிறுவனின் தாய் வனிதா, தன் மகனுக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுவனை பரிசோதித்த மருத்துவர், வயிற்றில் பல்வேறு பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளார். இதைத் தொடர்ந்து அன்று நள்ளிரவில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அப்பொருட்கள் வயிற்றிலிருந்து அகற்றப்பட்டன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cvgyvreyww4o



