புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரப் பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 28-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் குதித்தார். அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால், டெல்லி போலீசார் அவரை வலுக்கட்டாயமாக மத்திய அரசுக்கு சொந்தமான டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரை தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்ற உத்தரவிடக்கோரி. அவரது மனைவி ஆங்மோ. டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக் கல் செய்தார். அதை நேற்று முன்தினம் விசாரித்த ஒற்றை நீதிபதி மினி புஷ்கர்ணா, சோனம் வாங்சுக்கின் சிகிச்சையில் தலையிட வேண்டியது இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். அந்த உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டு 2 நீதிபதிகள் அமர்வில் ஆங்மோ மேல்முறையீடு செய்தார். அவரது மனு, தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா, நீதிபதி தேஜாஸ் கரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:- டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரி நிர்வாகம், சோனம் வாங்சுக் கின் நோயியல் குறிப்புகள், மருத்துவ அறிக்கைகள் ஆகிய வற்றை தாக்கல் செய்ய வேண்டும். அவற்றை பரிசீலித்து, சோனம் வாங்சுக்கை தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றுவது குறித்து 21-ந் தேதி (இன்று) முடிவு செய்யப்படும். அப்போது, சோனம் வாங்சுக்குக்கு சிகிச்சை அளிக்கும் டெல்லி எய்ம்ஸ் பொறுப்பு இயக்குனர், எய்ம்ஸ் அவசர பிரிவு டாக்டர் ஆகி யோரும் இருக்க வேண்டும். இதற்கு முன்பு சிகிச்சை அளித்த டாக்டரும் இருக்க வேண்டும். அத்துடன், தனியார் ஆய்வகத்தில் எடுக்கப்பட்ட சோனம் வாங்சுக்கின் ரத்த பரிசோதனை முடிவுகளை அவரது மனைவி தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/will-sonam-wangchuk-be-shifted-to-a-private-hospital-delhi-high-court-to-decide-today




