தூத்துக்குடி, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, காலை 8 மணிக்கு கால சந்தி பூஜை, நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடந்தது. மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து மூலஸ்தான தீபராதனை நடந்தது. இதில் குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டு, விளக்கேற்றி அம்மன் துதி பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர். மேலும், நேற்று காலை முதல் தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து, கடலில் புனித நீராடினர். தொடர்ந்து கோவில் சந்நதி முன்பு மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதனால் கோவில் வளாகத்தில் கூட்டம் அலைமோதியது. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை கோவில்பட்டி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்காரமும் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் 216 திருவிளக்குகள் ஏற்றப்பட்டு சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அம்மன் துதி பாடல்களை பாடி வழிபட்டனர். கஞ்சி கலய ஊர்வலம் கஞ்சி கலய ஊர்வலம் எட்டயபுரம் அலங்காரியம்மன் தெரு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் நேற்று காலையில் குரு பூஜை, வினாயகர் பூஜை, சக்தி பூஜை நடந்தது. தொடர்ந்து மழைவளம், விவசாயம், தொழில்வளம், மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. இதை ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி முருகன் தொடங்கி வைத்தார். பின்னர் உலக சமாதானம் வேண்டி கஞ்சி கலயம், தீச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மன்ற தலைவர் அப்பாசாமி தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக நடந்த ஊர்வலத்தில் ஆன்மிக இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் கோபிநாத். சக்திவேல், தளவாய்புரம் ராஜ், சித்த மருத்துவர் வேம்பு கிருஷ்ணன், மந்திதோப்பு ராஜதுரை, மாரியம்மாள், கிருஷ்ணம்மாள், கமலா, சுதா, ராணி, சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/devotional/pournamni-thiruvilakku-puja-at-kulasekarapattinam-mutharamman-temple




