பெங்களூரு, கொரோனா வைரஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் பரவி அனைத்து நாடுகளையும் முடக்கி போட்டது. அதன்பிறகு அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து அவ்வப்போது தலை தூக்கி வருகிறது. இதற்கிடையில் ஆந்திராவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனையொட்டி அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆந்திராவை தொடர்ந்து கர்நாடகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் (ஜூன்) 14 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த மாதம் பாதி முடிவடைவதற்குள் 32 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 193 பேருக்கு பரிசோதனை செய்ததில் 32 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. கர்நாடகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை கமிஷனர் குருதத்த ஹெக்டே கூறுகையில், கர்நாடகத்தில் கண் டறியப்பட்ட பாதிப்புகள் தீவிரமானவை அல்ல. சுகாதாரத்துறை நிலைமையை நாள்தோறும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/coronavirus-outbreak-in-karnataka-after-andhra-pradesh-people-shocked




