தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022-ம் ஆண்டு புதுச்சேரி யில் வசித்து வரும் தனது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தி ருந்தனர்.புதுச்சேரி குற்றவியல் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த வழக்கில் சமரச தீர்வு மையத்தை அணுகி தீர்வு காண சென்னை ஐகோர்ட்டு உத் தரவிட்டது. இதன்படி, 4 முறை சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனு, நீதி பதி லட்சுமி நாராயணன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணை அப்போது, வழக்கில் புகார்தாரரான மரிய வில்சனின் சகோதரர் மனைவி கெரோலின் நேரில் ஆஜராகினார். அவர் தரப்பில் ஆஜரான வக்கீல், "வழக்கில் சமரச பேச்சுவார்த்தை நடத்த புகார்தாரருக்கு விருப்பமில்லை. முன்பு நீதிபதியே சமரச தீர்வு மையத்தை அணுக கூறியதால் அதை மறுக்க முடியவில்லை” என விளக்கம் அளித்தார். அமைச்சர் மரியவில்சன் தரப்பில், "ஒரு பிரச்சினை தவிர மற்ற அனைத் துக்கும் தீர்வு எட்டப்பட்டு விட்டது” என தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதி, "புகார்தாரர் சமரசத்துக்கு விரும்பாத நிலையில், சமரச தீர்வு மையத்தில் தீர்வு காணும்படி நிர்பந்திக்க முடியாது. எனவே வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு மீது விசாரணை நடத்த வேண்டும்” என்றார். வழக்கை ரத்து செய்யக்கோரி மனு அப்போது அமைச்சர் மரிய வில்சன் தரப்பில், "சட்டசபை நடவடிக்கை களில் பங்கேற்க வேண்டியுள்ளதால், நாளை வழக்கு விசாரணைக்காக புதுச்சேரி கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும்” என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதை ஏற்று, விசாரணைக்கு ஆஜராக மரியவில்சனுக்கு விலக்கு அளித்த நீதிபதி, பேச்சுவார்த்தைக்கு புகார்தாரர் விரும்பாததால், சமரச பேச்சுவார்த்தையை நீட்டிக்க அனுமதி கோரிய சமரச தீர்வு மைய கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.மேலும், வழக்கை ரத்து செய்யக் கோரிய மரிய வில்சனின் மனு மீதான விசாரணையை வரும் 28-ந் தேதி தேதிக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் தள்ளிவைத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/case-involving-attack-on-brothers-house-minister-maria-wilsons-mediation-attempt-fails




