சேலம், சேலம் பகுதியை சேர்ந்தவர் மாயவன் (வயது 22), தொழிலாளி. இவர் கடந்த 2025-ம் ஆண்டு 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன்காரணமாக அந்த சிறுமி 4 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதையடுத்து சிறுமி சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார். அப்போது இதுகுறித்து டாக்டர்கள் மருத்துவம னையின் குழந்தைகள் நல மையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாயவன் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் அனைத்து மகளிர் போலீசார், மாயவன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/pocso-case-registered-against-a-young-man-who-married-a-17-year-old-girl




