தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலை வர் ஜான் பாண்டியன் நேற்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சன்குமார் என்பவர் எனது வீட்டுக்கு வந்து என்னை சந்தித்தார். அப்போது சாந்தி என்பவர் குடும்ப பிரச்சினை தொடர்பாக என்னை சந்திக்க விரும்புவ தாக ரஞ்சன்குமார் தெரிவித்தார். இதையடுத்து, சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து என்னை சந்தித்த சாந்தி, தன்னை வீரமணி ஏமாற்றி தனது வாழ்க்கையை சீரழித்துவிட்டதாகவும், ரூ.20 கோடி பணம் பெற்றுத்தர உதவுமாறும் என்னிடம் கூறினார். அதற்கு நான், இது உங்கள் தனிப்பட்ட பிரச்சினை. நீங்களே பேசி முடித்துக் கொள்ளுங்கள். சட்டரீதியாக போலீஸ் துறையில் புகார் அளியுங்கள் என்று அறிவுறுத்தினேன்.அதன்பிறகு ரஞ்சன்குமாரோ, சாந்தியோ மீண்டும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. பாலியல் சர்ச்சையில் சிக்கிய வீரமணி விவகாரம் தொடர்பாக என்னிடம் எந்தவிதமான வீடியோ ஆதாரங்களும் இல்லை. ஆதாரங்கள் என்னிடம் இருந்திருந்தால், உடனடியாக அதை வெளியிட்டு உரிய நட வடிக்கை எடுத்திருப்பேன்.தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவ டிக்கை எடுக்க வேண்டும். என் மீது யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங் களில் அவதூறான தகவல்கள் பரப்பப்படுகிறது.இதுதொடர்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள எனது கட்சி நிர்வாகிகள் மூலம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க அறிவுறுத்தி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/i-am-being-slandered-over-the-veeramani-issue-john-pandians-interview



