லக்னோ, அயோத்தி கோவிலுக்கு தனது குடும்பம் தானமாக வழங்கிய ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட 'ராமசரிதமானஸ்' புனித நூல், அங்கிருந்து காணாமல் போயுள்ளதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி லட்சுமிநாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவில் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி அன்று முறைப்படி திறக்கப்பட்டது. இக்கோவிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிராண பிரதிஷ்டை மற்றும் திறப்பு விழாவை பிரதமர் மோடி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். ராமசரித மானஸ் இந்நிலையில் லட்சுமிநாராயணன் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி ஆகியோர் சேமித்து வைத்ததில் இருந்து, தங்கம், வெள்ளி மற்றும் தாமிரத்தால் ஆன 147 கிலோ எடையுள்ள 'ராமசரித மானஸ்' நூலை ஏப்ரல் 2024-ல் கோவிலுக்கு வழங்கினர். இதில் 522 தங்க முலாம் பூசப்பட்ட பக்கங்கள் இருந்தன. புனித நூல் காணவில்லை இந்த புனித நூல் தினமும் பக்தர்களின் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்ததாகவும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 5 மாதங்களுக்குப் பிறகு அது அகற்றப்பட்டு காணாமல் போனதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக உத்தரபிரதேச முதல்-மந்திரி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். மேலும், கோவில் காணிக்கைகள் மற்றும் நன்கொடைகள் நிர்வகிக்கப்படுவதில் உள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பெரும் அதிர்ச்சி ராமர் கோவில் நன்கொடையில் முறைகேடுகள் மற்றும் பல கோடி ரூபாய் காணிக்கைகள் மாயமானது தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த புதிய புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/ayodhya-ram-temple-gold-plated-holy-book-worth-rs-5-crore-missing




