டாம் ஹாலண்ட் நடித்துள்ள ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் இந்தியாவில் மட்டுமே இதுவரை ரூ.460 கோடி வசூலித்துள்ளது. கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் கடந்த ஜூலை 31ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. ஜூலை 30ஆம் தேதி இந்தியாவில் வெளியானது. இதில் டாம் ஹாலண்ட் கதாநாயகனாகவும், ஜெண்டாயா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ திரைப்படத்திற்குப் பிறகு சுமார் ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் அமோக வரவேற்பு மார்வெல்லின் 38-வது திரைப்படமாகவும் ‘ஸ்பைடர்மேன்’ திரைப்பட வரிசையில் நான்காவது படமாக வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தை காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு சென்று வருகின்றனர். புதிய எதிரிகள், விறுவிறுப்பான அதிரடி காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளால் உலகம் முழுவதும் இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ சாதனை முறியடிப்பு வெளியாகிய முதல் நாளிலேயே ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் இந்தியாவில் சுமார் ரூ.72 கோடி மொத்த வசூலைக் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன்மூலம், இதுவரை இந்தியாவில் ஹாலிவுட் திரைப்படங்களில் அதிக முதல் நாள் வசூல் என்ற சாதனையை வைத்திருந்த ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படம் இதுவரை ரூ.373 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளது. ‘தி ஒடிசி’ சாதனை முறியடிப்பு கடந்த ஜூலை 17ஆம் தேதி வெளியான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘தி ஒடிசி’ திரைப்படம் இதுவரைக்கும் இந்தியாவில் ரூ. 200 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதனை ‘ஸ்பைடர்மேன்’ திரைப்படம் 3 நாட்களில் முந்தியுள்ளது. புதிய மைல்கல் முதல் நாளிலேயே இந்திய வசூலில் புதிய உச்சத்தை எட்டியுள்ள ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ இந்திய திரையரங்கு வரலாற்றில் ஹாலிவுட் திரைப்படங்களின் முதல் நாள் வசூலில் புதிய சாதனையை படைத்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சூப்பர்மேன் படங்களையும் முந்திய வசூல் மேலும், டிசி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான 'சூப்பர்மேன்' மற்றும் 'சூப்பர்கேர்ள்' ஆகிய இரண்டு திரைப்படங்களின் உலகளாவிய மொத்த வசூலையும், 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' வெறும் நான்கு நாட்களிலேயே முந்தியுள்ளதாக கூறப்படுகிறது. தகவல்களின்படி, 'சூப்பர்மேன்' மற்றும் 'சூப்பர்கேர்ள்' ஆகிய இரண்டு படங்களும் சேர்த்து சுமார் ரூ.7,100 கோடி வசூல் செய்த நிலையில், 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் தற்போது ரூ.8,000 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளியான சில நாட்களிலேயே உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தி வரும் 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே', அடுத்த சில நாட்களில் மேலும் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடிக்கும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. இந்தியாவில் அதிக வசூல் செய்த டாப் ஹாலிவுட் திரைப்படங்கள் 1. ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே-ரூ.460 கோடி 2. அவதார்: தி வே ஆப் வாட்டர்-ரூ.378 கோடி 3. அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்-ரூ.373 கோடி 4. அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்-ரூ.227 கோடி ரூ. 15,900 கோடி வசூல் இந்நிலையில், ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ படம் இந்தியாவில் ரூ. 460 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் உலகளவில் சுமார் ரூ. 15,900 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-sets-box-office-record-in-india




