சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் கன்னியாகுமாரி விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மழை வேண்டி வழிபாடு உலக மக்கள் பூரண நலம் பெற்று வாழ்வதற்கும், மழை வளம் வேண்டியும் சங்கரலிங்க சுவாமி சன்னதி, சங்கரநாராயண சுவாமி சன்னதி, கோமதி அம்மன் சன்னதி ஆகிய சன்னதிகளில் இந்த விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில் சங்கரநாராயண சுவாமி கோவில் கண்காணிப்பாளர் ராஜகோபால், விவேகானந்தா கேந்திர நிர்வாகிகள் பரமகுரு, காமாட்சி, பாஜக பிரமுகர் ராஜா, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/devotional/1008-vilakku-puja-at-sankaranarayana-swamy-temple




