கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டம் சங்க்ராயிலில், அமுல் நிறுவனத்தின் வங்காள பால் பண்ணை திட்டம் தொடங்கப்பட்டது. ரூ.700 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தில் உல கின் மிகப்பெரிய தயிர் உற்பத்தி ஆலை நிறுவப்பட உள்ளது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்த தொழிற்சாலையில் தினமும் 30 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தி, 10 லட்சம் கிலோ தயிர் மற்றும் பிற பால் பொருட்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந் தத் திட்டத்தால் சுமார் 1.25 லட்சம் பால் உற்பத்தியாளர்கள், குறிப்பாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமித்ஷா பேசும்போது, "மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் சுதந்திரத்துக்குப் பிறகு இல்லாத ஒன்று. பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு. 'சோனார் பங்களா' (பொன்னான வங்கா ளம்) என்ற கனவை மீண்டும் நனவாக்கும் முயற்சி தொடங்கி உள்ளது” என்று கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/west-bengal-to-get-the-worlds-largest-curd-production-plant-under-a-700-crore-dairy-project




