சென்னை, தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் வீழ்த்தி தவெக ஆட்சியைப் பிடித்தது. திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தவெக ஆட்சி அமைத்துள்ளது. முன்னதாக பெரும்பான்மை கிடைக்காமல் தவெக ஆட்சியை அமைக்க தடுமாறிக்கொண்டு இருந்த நேரத்தில் திமுகவும் அதிமுகவும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதிமுக ஆட்சி அமைக்க திமுக வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. சக்திவாய்ந்த இயக்கமாக எலியும் பூனையுமாக தேர்தல் களத்தில் இருந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க ஆலோசனை நடத்தியதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ரகுபதி இது தொடர்பாக பேசியதாவது: "தமிழ்நாட்டில் நிரந்தர கூட்டணியும் கிடையாது. நிரந்தர எதிரிகளும் கிடையாது. அதே நேரத்தில் அதிமுக பக்கம் போகமாட்டோம். தனித்து நின்று வெல்லக்கூடிய அளவிற்கு சக்திவாய்ந்த இயக்கமாக திமுகவை உருவாக்கிக் காட்டுவோம் கொத்து பரோட்டா போட்டிருப்பார்கள் தமிழக மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கு சென்றாலும் தவெகவினர் கஞ்சா விற்பனை செய்கிறார்கள். திருமயம் தொகுதியில் தவெகவில் இருக்கக்கூடிய பலர் மணல் கடத்துகிறார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என எங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது என அதிகாரிகள் சொல்கின்றனர். லஞ்சம் வாங்காத விஜய் சார், சிறுவர்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிய விஜய் சார், அந்த மேலிடம் யார்? உங்கள் ஆட்சியில்தான் இவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது. முதல்வரே கொஞ்சம் கண்களை விழித்துப்பாருங்கள். நான் கொளத்தூரில் 5 நிமிடம் பேசியதற்கே கொத்துப் பரோட்டா போட்டுவிட்டனர் என சொல்லியிருக்கிறார். நீங்கள் 10 நிமிடம் பேசியிருந்தால், உங்களை கொத்து பரோட்டா போட்டிருப்பார்கள். எழுதிக் கொடுத்த 5 நிமிட வசனத்தை தான் நீங்கள் பேசுனீர்கள்; 6-வது நிமிடம் பேசியிருந்தால், உங்களுக்கா ஓட்டு என மக்கள் ஓடியிருப்பார்கள்”என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-dmk-form-an-alliance-with-the-aiadmk-former-minister-raghupathy-clarifies




