பெங்களூரு, நடத்தையில் சந்தேகம் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கேசகோடு கிராமத்தை சேர்ந்தவர் ரகு (வயது 41). இவர் சிக்கமகளூருவில் சொந்தமாக பேக்கரி வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி ககனா (38). இவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 12 மற்றும் 6 வயதில் 2 மகன்கள் உள்ளனர். தொழில் காரணமாக ரகு சிக்கமகளூருவிலேயே குடும்பத்து டன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ககனாவின் நடத்தையில் ரகுவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இத னால், அவர்கள் 2 பேருக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே வாக்குவாதம் ஏற்பட்டு, குடும்பத்தகராறு ஆனது. கொலை இந்நிலையில், சம்பவத்தன்று மனைவியுடன் காரில் கேசகோடு கிராமத்திற்கு புறப்பட்ட ரகு, வழியிலேயே மனைவியுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அவரை காரில் வைத்து கொலை செய்தார். கொலை செய் வதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர், மாலை 6.30 மணியளவில் கேசகோடு கிராமத்துக்கு சென்ற ரகு, தனது மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களுக்கு செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு மனைவியை கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் கொலை வீடியோவையும் அவர்களுக்கு அனுப்பினார். தானும் தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு இணைப்பை தொடர்பை துண்டித்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரகுவை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால், அவர் செல்போன் அழைப்பை எடுத்து பேசவில்லை. தூக்குப்போட்டு தற்கொலை இதையடுத்து, கேசகோடு கிராமத்தின் எல்லையில் சாலையோ ரத்தில் இருந்த மரத்தில் ரகு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, ரகுவின் உறவினர்கள் அவரை கிராமப்பகுதியில் தேடினர். அப்போது, அவர் கிராம எல்லையில் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் அரேஹள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில், அங்கு விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர், போலீசார் ரகுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை இதையடுத்து, ரகு தனது மனைவி ககனாவின் உடலை கிரா மத்தின் அருகில் உள்ள யகட்டி கால்வாயில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். பின்னர், மீட்பு படையினரை வரவழைத்து ககனாவின் உடலை கால்வாயில் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், ரகு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோ அழைப்பில் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/husband-kills-wife-and-commits-suicide-video-taken-and-sent-to-in-laws




