முதல் பார்வைக்கு முன்பே.டீசருக்கு முன்பே.டிரெயிலருக்கு முன்பே. ‘ஒரண்ட’ இன்று தமிழகம் முழுவதும் பேசப்படும் பெயராக மாறியுள்ளது. நடிகர், நடிகைகள் யார். தொழில்நுட்பக் கலைஞர்கள் யார். முதல் பார்வை எப்போது. டீசர் எப்போது. என எந்த விவரத்தையும் வெளியிடாமல், 'ஒரண்ட' என்ற தலைப்பால் மட்டுமே தனது அடுத்த படத்தை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களிடையே பேசுபொருளாக மாற்றியுள்ளார் இயக்குநர் சுசி கணேசன். இயக்குநர் சுசி கணேசன் சுசி கணேசன் 2002-ல் ‘பைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் பிரசன்னா மற்றும் கனிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம், கல்லூரி நண்பர்களை மையமாக கொண்டது. அதே ஆண்டில், அவர் ‘விரும்புகிறேன்’ படத்தை இயக்கினார். அதனைத் தொடர்ந்து, ஜீவன் மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் ‘திருட்டுப் பயலே’ படத்தையும் இயக்கினார். 2017ல் பாபி சிம்ஹா, பிரசன்னா மற்றும் அமலா பால் ஆகியோர் நடிப்பில், சுசி கணேசன் இயக்கத்தில் ‘திருட்டுப் பயலே 2’ வெளியானது. தலைப்பின் மூலமே ஒரு திரைப்படத்தைப் பற்றிப் பேச வைப்பது சுசி கணேசனுக்கு புதிதல்ல. அவரது ஒவ்வொரு திரைப்படத் தலைப்பும் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டவை. படம் வெளியாகும் முன்பே, அதன் தலைப்பு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து, பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குவது அவரது தனிச்சிறப்பு. ‘விரும்புகிறேன்’ திரைப்படத்தின் மூலம் பழமையான ஒரு தமிழ்ச்சொல்லையே மறக்க முடியாத திரைப்படத் தலைப்பாக மாற்றினார். அந்தப் படத்தின் விளம்பரத்திற்காக அண்ணாசாலையில் தீயணைப்பு குழாய்களால் பிணைக்கப்பட்ட நிலையில் நாயகன் நாயகி இடம்பெற்ற பிரம்மாண்ட விளம்பரம் அன்றைய காலகட்டத்தில் பெரும் பேசுபொருளானது. ‘5 ஸ்டார்’ என்ற தலைப்பின் மூலம் ஒரு சாதாரண சொல்லை என்றும் மறக்க முடியாத நட்பின் அடையாளமாக மாற்றினார். ‘திருட்டுப் பயலே’ திரைப்படத்தின் தலைப்பே அந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று என்று இயக்குநர் கே. பாக்யராஜ் பொதுவெளியில் பாராட்டியிருந்தார். ‘கந்தசாமி’ திரைப்படத்தின் மூலம் ஒரு பொதுஜன பெயரையே பிரம்மாண்டமான சூப்பர் ஹீரோவின் அடையாளமாக உயர்த்திய சுசி கணேசன், அந்தப் படத்தின் துவக்க விழாவிலேயே கையடக்க டிஜிட்டல் திரையில் டிரெயிலரை வெளியிட்டு, அக்காலத்திலேயே புதுமையான விளம்பர உத்தியை அறிமுகப்படுத்தியிருந்தார். திரைப்படத்தின் தலைப்பு என்பது வெறும் பெயர் அல்ல, ரசிகர்களுக்கும் கதைக்கும் இடையிலான முதல் உணர்வுப்பூர்வமான இணைப்பு என்பதைக் காலம் தோறும் நிரூபித்து வருபவர் சுசி கணேசன். இப்போது, 'ஒரண்ட' மூலமும் அதையே மீண்டும் ஒருமுறை நிகழ்த்தியிருக்கிறார். முதல் பார்வைக்கு முன்பே. டீசருக்கு முன்பே.டிரெயிலருக்கு முன்பே. ‘ஒரண்ட’ இன்று தமிழகம் முழுவதும் பேசப்படும் பெயராக மாறியுள்ளது. தற்போது ‘ஒரண்ட’ என்ற படத்தை இயக்கி வருகிறார். 85 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டநிலையில் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/director-susi-ganesan-makes-her-debut-after-9-years




