சென்னை, தமிழ்நாட்டின் நியாயமான தண்ணீர் உரிமை பெற பிரதமர் மோடியிடமோ, மத்திய பாஜக அரசிடமோ இதுவரை ஒரு வார்த்தையாவது பேசினீர்களா? என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வு எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- கர்நாடகாவில் போராடும் பாஜக கர்நாடகாவில் “தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட திறக்கக் கூடாது” என்று எடியூரப்பா உட்பட பாஜக தலைவர்கள் நேற்று வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதை பார்க்கத் தவறிவிட்டீர்களா, நயினார் அண்ணே? ஒருவேளை பார்க்க மறந்துவிட்டீர்கள் என்றால், இதோ இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் அவர்களின் ட்விட்டர் பக்கங்களைச் (Twitter handles) சற்று பாருங்கள்! எதிர்க்க தைரியம் இருக்கிறதா? காவிரி உரிமையில் தமிழ்நாட்டிற்கு எதிராகப் போராடும் எடியூரப்பாவையும் கர்நாடக பாஜகவையும் எதிர்க்க உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? தமிழ்நாட்டின் நியாயமான தண்ணீர் உரிமை பெற பிரதமர் மோடியிடமோ, மத்திய பாஜக அரசிடமோ இதுவரை ஒரு வார்த்தையாவது பேசினீர்களா? பாஜகவின் இரட்டை வேடம்! கர்நாடகாவில் தமிழ்நாட்டிற்கு எதிராகப் போராடுவது, டெல்லியில் மோடி அரசு மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிப்பது, தமிழ்நாட்டிற்கு வந்து காங்கிரஸ் மீது பழியைப் போடுவது - இதுதான் பாஜகவின் அப்பட்டமான இரட்டை வேடம்! உங்கள் இந்தப் பொய் நாடகத்தையும் போலி அரசியலையும் தமிழ்நாட்டு விவசாயிகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-farmers-have-understood-the-bjps-fake-politics-manickam-tagore




