சென்னை, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸிற்காக, பள்ளிக்கல்வித்துறையின் ‘எமிஸ்’ தளம் மூலம் 70 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ஸ்மார்ட் பஸ் பாஸ் அச்சிடும் பணிகள் இந்த வாரம் தொடங்க உள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, 30 கிலோமீட்டர் தூரம் வரை இலவசமாக பயணம் செய்வதற்கான பஸ் பாஸ் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான மாணவர்களின் விவரங்கள் பள்ளிக்கல்வித்துறையின் ‘எமிஸ்’ தளம் வாயிலாக போக்குவரத்துக்கழகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மதுரை, கோவை, விழுப்புரம், சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட 8 போக்குவரத்துக்கழக கோட்டங்களில் இருந்து 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான பஸ் பாஸ் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை கோட்டத்தில் மட்டும் 9.13 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். செப்டம்பர் மாத இறுதிக்குள். ஆகஸ்டு 31-ந்தேதிக்குள் பஸ் பாஸ் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை மற்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால், பஸ் பாஸ் அச்சிடும் பணிகள் தள்ளிப்போனது. தற்போது இந்த வாரம் அச்சிடும் பணி தொடங்கப்பட்டு, செப்டம்பர் மாத இறுதிக்குள் பஸ் பாஸ்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, புதிய பஸ் பாஸ் கிடைக்கும் வரை மாணவர்கள் தங்களிடம் உள்ள பழைய பஸ் பாஸை பயன்படுத்தி பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி சீருடையில் வரும் மாணவர்களை பஸ் பாஸ் வைத்திருப்பவர்களாக கருதி பயணம் செய்ய அனுமதிக்குமாறு நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/free-bus-passes-for-students-to-be-given-by-the-end-of-this-month



