லண்டன், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி பர்மிங்காமில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.இங்கிலாந்து அணி 47.5 ஓவர்களில் 258 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய இந்தியா 45.2 ஓவரில் 262 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில், பும்ரா தனது அபார பந்துவீச்சால் இரு சாதனைகளைப் படைத்துள்ளார். இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்கை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம், இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியப் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.இதற்கு முன் ரவீந்திர ஜடேஜா 30 விக்கெட்டுடன் முதலிடத்தில் இருந்தார். தற்போது 31 விக்கெட்டுடன் பும்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/indian-player-bumrah-sets-a-new-record




