பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம், கீழக்கணவாய் கிராமத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது. வீடியோ காட்சிகள் இந்த நிலையில் மாணவ-மாணவிகளின் நலன் கருதி கல்லூரி நிர்வாகம், வளாகத்தில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடிக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து சம்பவத்தன்று குரங்குகளை பிடிக்க 2 பேர் கல்லூரிக்கு வந்துள்ளனர். அவர்கள் குரங்குகளை துன்புறுத்தி பிடித்ததாக கூறப்படுகிறது. குரங்கினை துன்புறுத்தி பிடித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரூ.25 ஆயிரம் அபராதம் இதனை கண்ட பெரம்பலூர் வனத்துறையினர் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் குரங்கினை துன்புறுத்தி பிடித்த விவகாரம் குறித்து கல்லூரி முதல்வர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து வனத்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக, குரங்கு பிடிப்பாளர்களான புதுக்கோட்டை மாவட்டம் மாதிரிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஜீவா(வயது 20), திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் மலை அடிவாரத்தை சேர்ந்த சின்னத்துரை (70) ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-involving-the-capture-and-torment-of-a-monkey-two-individuals-fined-25000-each




