திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இலவச தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 78 ஆயிரத்து 67 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 31 ஆயிரத்து 158 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒரு நாள் உண் டியல் காணிக்கை ரூ.4 கோடியே 39 லட்சம் ஆகும். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 27 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பினர். தேதி. நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத் தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 10 முதல் 15 மணி நேரம் வரை ஆனது. மேலும் நேற்று முன்தினம் 4 லட்சத்து 16 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. 1 லட்சத்து 93 ஆயிரம் பக்தர்க ளுக்கு அன்னப்பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது. 2 லட்சத்து 601 பக்தர்களுக்கு மருத்துவச் சேவைகள் அளிக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/devotional/78000-devotees-had-darshan-of-the-deity-at-tirupati-in-a-single-day-439-crore-collected




