தூத்துக்குடி, தூத்துக்குடியில் கடனாகப் பெற்ற பணத்தை திருப்பிக் கேட்ட நகைக்கடை உரிமையாளரை தாக்கிய பழ கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். நகைக்கடை உரிமையாளர் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் செக்கடி புதுத்தெருவைச் சேர்ந்த ரவி (வயது 63), சாத்தான்குளம் முதன்மை சந்தைப் பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் சாத்தான்குளத்தில் பழக்கடை நடத்தி வரும் கொம்பன்குளம் மேட்டுக்குடியிருப்பைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. ரூ.1 லட்சம் கடன் இந்த நிலையில், பாஸ்கர் தான் வங்கியில் அடமானம் வைத்த நகை ஏலத்திற்கு வருவதாகவும், அதை மீட்பதற்கு ரூ.1 லட்சம் கடனாக தருமாறும் ரவியிடம் கேட்டுள்ளார். அதனை நம்பி ரவி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாஸ்கரின் வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சம் பணம் பரிமாற்றம் செய்துள்ளார். நகைக்கடை உரிமையாளரை தாக்கிய பழ கடைக்காரர் அதன்பின்னர் பாஸ்கர் ரூ.70 ஆயிரத்தை மட்டும் ரவியிடம் திருப்பிக் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.30 ஆயிரத்தைக் கொடுக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ரவி, பாஸ்கரின் வீட்டிற்கு நேரில் சென்று பணத்தைத் தருமாறு கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாஸ்கர், நகை வியாபாரி ரவியை அவதூறாகப் பேசி சரமாரியாக தாக்கியுள்ளார். கைது இதில் காயமடைந்த ரவி, சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து ரவி அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாஸ்கரை கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-fruit-vendor-arrested-for-attacking-jewellery-shop-owner




