சென்னை, நேபாள பெரு வெள்ளவிபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்ப இறைவனை பிராத்திக்கிறோம் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். எதிர்பாராத விபத்து இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இதுவரை கேள்விப் படாத அளவிற்கு இமயமலை அடிவாரத்தில் எதிர்பாராத விபத்தும், பெரும் சேதமும் நடந்திருக்கிறது. ஏன் நடந்தது என்பதற்கான பல்வேறு விமர்சனங்களும், விவாதங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு அதற்கான விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களை கண்டறிந்து மக்களுக்கு விளக்க வேண்டும். இதுவரை தெளிவுபடுத்தவில்லை அங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் மட்டுமில்லாமல் ஆன்மீக பயணம் சென்ற பல மாநில மக்களும் விபத்தில் சிக்கி பேராபத்தில் உள்ளார்கள். ஆன்மீகப் பயணம் சென்ற தமிழர்களும் மிகப்பெரிய எண்ணிக்கையில் அங்கே சிக்கிக் கொண்டுள்ளார்கள். இன்றைக்கு 3வது நாளாக பலரிடமிருந்தும் தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. மத்திய, மாநில அரசுகளும் யார் தப்பித்தார்கள் யார் சிக்கிக் கொண்டார்கள் என்ற விவரத்தையும் இதுவரை தெளிவுபடுத்தவில்லை. மாவட்ட கலெக்டர்கள் தகவல் கிடைக்காத குடும்பத்தினர் மிகவும் வேதனையில் உள்ளார்கள். உயிரோடு இருப்பவர்களை மீட்டு அவரவர் மாநிலத்துக்கு அனுப்புவதும், துரதிஷ்டவசமாக உயிரிழந்தவர்களுடைய விபரங்களையும் தாமதமில்லாமல் கண்டுபிடித்து தர வேண்டும். அந்தந்த மாவட்டத்திலே இருக்கின்ற மாவட்ட கலெக்டர்கள் இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்கவில்லை. கூட்டுப் பிரார்த்தனை இப்படிப்பட்ட இந்த சூழலில் ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தையும் நேரில் சென்று சந்தித்து அரசு எடுக்கின்ற முயற்சிகளை தெளிவுபடுத்தி நம்பிக்கையூட்ட வேண்டும். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் AKP சின்ராஜ் மூலமாகவும், இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் VS மாதேஸ்வரன் மூலமாகவும் வெளியுறவுத்துறை அமைச்சரையும், இந்திய துணை ஜனாதிபதியையும் தொடர்பு கொண்டு விபரங்களை அறிய முயற்சித்து வருகிறோம். நேற்றைய தினம், விபத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக அனைத்து குடும்பங்களும் கூட்டுப் பிரார்த்தனை செய்திருக்கிறோம். நேபாளத்தில் விபத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/reports-of-the-floods-in-nepal-are-concerning-er-eswaran




