சென்னை தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அக்டோபர் 1-ந் தேதி முதல் ரூ.5,000 வரை பராமரிப்பு தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு தொகை இதன்படி, மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளுக்கு மாதம் ரூ.5,000-ம், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளுக்கு ரூ.4,000-ம், ஊரக பகுதிகளில் உள்ள கடைகளுக்கு ரூ.3,000-ம் பராமரிப்பு தொகையாக வழங்கப்பட உள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதை தடுக்கும் வகையில் இந்த பராமரிப்பு தொகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டாஸ்மாக் கடைகளை தினசரி சுத்தம் செய்தல், துப்புரவு பணியாளரை நியமித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த தொகையை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், பராமரிப்பு தொகையை மின்கட்டணம் செலுத்துவதற்கோ, கட்டிட பழுதுபார்ப்பு பணிகளுக்கோ அல்லது வேறு பயன்பாடுகளுக்கோ பயன்படுத்தக்கூடாது என டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதத்திற்கான பராமரிப்பு தொகை, செப்டம்பர் மாத சம்பளத்துடன் டாஸ்மாக் பணியாளர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-amount-of-up-to-rs-5000-for-tasmac-liquor-shops-from-oct-1




