சென்னை, சென்னையில் செப்டம்பர் 8-ந்தேதி வரை நடைபெற உள்ள தமிழக சட்டசபை கூட்டத் தொடர் மற்றும் எந்தெந்த நாளில் என்னென்ன மானியக் கோரிக்கை? என்பது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம். அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் தமிழக சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நாளை (வியாழக்கிழமை) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம் தேதி வாரியாக வருமாறு: நாளை வேளாண் பட்ஜெட் 6-8-2026 - 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கலாகிறது. 7-8-2026 - 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீது பொது விவாதம் தொடங்குகிறது. 10-8-2026 - 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான 2-வது நாள் விவாதம் நடக்கிறது. 11-8-2026 - 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான 3-வது நாள் விவாதம் நடக்கிறது. 12-8-2026 - 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. 17-ந்தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை 17-8-2026 - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை. 18-8-2026 - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, மனித வள மேலாண்மை துறை. 19-8-2026 - நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு. 20-8-2026 - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு. 21-8-2026 - சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, நீதி நிர்வாகம், எரிசக்தித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், சட்டத்துறை, இந்து சமய அறநிலையத் துறை. 24-8-2026 - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, பள்ளி கல்வித் துறை, தமிழ் வளர்ச்சி, உயர் கல்வித் துறை. 25-ந்தேதி தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை 25-8-2026 - இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை. 27-8-2026 - சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை. 28-8-2026 - இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள் - நிர்வாகம், போக்குவரத்து துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை. 31-8-2026 - மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை. செப்டம்பர் 1-ந்தேதி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை 1-9-2026 - கைத்தறி மற்றும் துணிநூல், கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை. 2-9-2026- பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு. 3-9-2026 - காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள். 7-9-2026 - காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு, வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம். 8-9-2026 - பொதுத்துறை, மாநில சட்டமன்றம், கவர்னர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-session-to-continue-till-september-8-what-subsidy-demands-will-be-made-on-which-days




