பகத் பாசில் நடிப்பில் உருவான புதிய திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பகத் பாசில் பிரபல மலையாள இயக்குனர் பாசிலின் மகன் ஆவார். தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன், வேட்டையன், மாரீசன், இதயம் முரளி முதலிய படங்களில் நடித்து உள்ளார். தெலுங்கில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தில் வில்லனாக நடித்து இந்திய அளவில் கவனம் பெற்றார். இயக்குனர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா தயாரிப்பில் உருவாகி வரும் ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ஷஷாங்க் யெலெட்டி இயக்கி வருகிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சவுரப் சக்தேவா இணைந்துள்ளார். இவர் தொடர்ந்து இந்தி படங்களில் நடித்த வந்த நிலையில் ஏற்கனவே ‘புஷ்பா’ திரைப்படத்திலும் பகத் பாசிலுடன் இணைந்து நடித்துள்ளார். மலையாளத்தில் கடந்த வருடம் இறுதியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘எக்கோ’ என்கிற படத்தில் குரியச்சன் என்கிற மர்ம நபராக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் நடிகர் பகத் பாசில், குழந்தை நட்சத்திரம் சாரா உள்ளிட்டோர் நடிப்பில் மாயாஜாலம் கலந்த கதையாக உருவான திரைப்படம் ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’. தெலுங்கில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், மலையாளத்திலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு கால பைரவா இசையமைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், பகத் பாசில் நடிப்பில் உருவான ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மேஜிக் கலைஞரான பகத் பாசிலுக்கும் குழந்தை சாராவுக்கும் இடையேயான சுவாரஸ்யமான பேன்டசி படமாக உருவாகியுள்ளது. டீசர் காட்சிகளும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/fahadh-faasils-dont-trouble-the-trouble-film-teaser-out




