சென்னை, சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் அரசு அதிகாரிகள் சென்னையில் உள்ள அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், பல்வேறு அரசியல் தலைவர்கள் மாவீரன் அழகுமுத்துக்கோனை புகழந்து தங்களது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “அடிமைப்பட்டு உயிர்வாழ்வதை விட, சுதந்திர மனிதனாய் உயிரை விடுவோம் என வீரமுழக்கமிட்டு, ஆங்கிலேயரின் பீரங்கி குண்டுகளைத் தன் நெஞ்சில் தாங்கி, தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வேட்கையை முதன்முதலில் விதைத்த மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில், அவர்தம் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/i-honor-and-pay-tribute-to-the-sacrifice-and-valor-of-maaveeran-azhagumuthu-kon-edappadi-palaniswami




