மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வட்டம் - கிளை - இளைஞரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "நம்மோடு கூட்டணி அமைத்தவர்கள் ஒவ்வொருவராகக் கூட்டணியை விட்டு வெளியே சென்றார்கள். ஜனாதிபதி ஆட்சி அமைந்துவிடக்கூடாது. ஜனாதிபதி ஆட்சி அமைந்தால் கவர்னர் ஆட்சி இங்கு வந்துவிடும், அப்படி வரக்கூடாது' என்று நம் தலைவரிடம் சொல்லிவிட்டு சென்றார்கள். மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சிலர் சொல்லாமல், கொள்ளாமல் சென்று விட்டார்கள். சிலர் ஆதரவு தருகிறோம் என்று நைட்டோடு நைட்டாகத் திருட்டுத்தனமாக சென்றுவிட்டனர்.நான் யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரியும். இப்போது அவர்கள் நிலைமை என்னவென்று உங்களுக்கு தெரியும். ஏன் என்றால் முதலமைச்சர் பிரதமர் வேட்பாளர் பதவிக்கே சென்றுவிட்டார். தேர்தல் முடிந்ததும் எல்லோருக்கும் ஒரே சைஸ் சோஃபா சென்றிருக்கிறது. முதல்வர் தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட வீட்டை விட்டு பெரிதாக வெளியில் வரவில்லை. ஆனால் தேர்தல் முடிந்ததும் ஆளுநரை தினம்தோறும் சந்தித்து பேசினார்" என்று தவெகவையும் கூட்டணி கட்சிகளையும் விமர்சித்து பேசியிருக்கிறார். "தமிழ்நாடு, சர்க்கஸ் கும்பலிடம் மாட்டிக்கொண்டிருக்கிறது."- உதயநிதி ஸ்டாலின் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/udhayanidhi-stalin-slams-tvk-alliance



