மும்பை, இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹைவான்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான மேரே ஹீரோ ஹாய் வோ என்ற பாடல் வெளியாகி உள்ளது. மீண்டும் இணைந்த அக்ஷய் - சயீப் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களான அக்ஷய் குமார் மற்றும் சயீப் அலிகானும் இணைந்து ‘ஹைவான்’ என்ற படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான மலையாள திரைப்படமான ‘ஒப்பம்’ படத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. 17 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அக்ஷய் குமார் மற்றும் சயீப் அலிகான் மீண்டும் இணைந்து நடித்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ‘ஹைவான்’ திரைப்படத்தை கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் வெங்கட் கே. நாராயணா மற்றும் ஷைலஜா தேசாய் பென்னின் தெஸ்பியன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் சயாமி கெர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். செப்டம்பர் 11-ம் தேதி ரிலீஸ் ‘ஹைவான்’ படத்தின் படப்பிடிப்பு மும்பை, கொச்சி மற்றும் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் வரும் செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. வரவேற்பை பெற்ற ‘ஹைவான்’ டீசர்! படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. அதிரடி காட்சிகளுடன் வெளியான அந்த டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான "மேரே ஹீரோ ஹாய் வோ" என்ற பாடல் வெளியாகி உள்ளது. இசை அமைப்பாளர் ப்ரிதம் இசையில் ஷான் மற்றும் வானிகா நாயக் இணைந்து பாடியுள்ளார். ஜாவேத் அக்தர் பாடல் வரிகளை எழுதியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/the-first-single-from-the-movie-haivan-starring-saif-ali-khan-has-been-released




