புதுடெல்லி, நீட் தேர்வு முறைகேடு. வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், கல்வி முறையில் சீர்திருத்தம் வேண்டியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி, இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தை நோக்கி 'சலோ சன்சாத்' பேரணி நடத்த அக்கட்சி அழைப்பு விடுத்திருந்தது. போலீசார் தடியடி இந்நிலையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை காலை முதலே தொடங்கி வந்தனர். நாடாளுமன்றத்திற்குள் பேரணி செல்ல முயன்ற போது கரப்பான் பூச்சி கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தடைகளை மீறி நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இணையதள சேவை துண்டிப்பு மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். ஜந்தர் மந்தரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லியில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மீது போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/police-lathicharge-on-cockroach-janata-party-members-who-took-out-a-rally-in-delhi




