சென்னை, 'விபத்து தடுப்பு நடவடிக்கையாக, 'ஹெல்மெட்' அணியாமல், இரு சக்கர வாகனம் ஓட்டும் போலீசாரின் வாகனங்களை, பறிமுதல் செய்ய வேண்டும்; அவர்களுக்கு ஒரு நாள் 'ஆப்சென்ட்' போட வேண்டும்' என, மண்டல ஐ.ஜி.,க்கள் உத்தரவிட்டுள்ளனர். 'பொதுமக்கள் அனை வரும் ஹெல்மெட் அணிந்து தான், இரு சக்கர வாகனம் ஓட்ட வேண்டும்' என, உத்தரவிடப் பட்டுள்ளது. சில நேரங்களில், சட்டத்தை அமல்படுத்த வேண்டிய போலீசாரே, அதனை மீறி வருகின்றனர். 'ஹெல்மெட்' அணியாமல் இரு சக்கர வாகனங்களில் போலீசார் சென்றால், பொதுமக்கள் அதை, 'வீடியோ' எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர். இது, காவல் துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறது. இதனை தவிர்க்கவும், விபத்து தடுப்பு நடவ டிக்கையாகவும், 'ஹெல் மெட்' அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டும் போலீசாருக்கு, ஒரு நாள், 'ஆப்சென்ட்' போட வேண்டும்' என, மாவட்ட எஸ்.பி.,க்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு ஐ.ஜி.,க்கள் மண்டல உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவு பின்வருமாறு; போலீசார், 'ஹெல் மெட்' அணியாமல் இரு சக்கர வாகனம் ஒட்டுவது தெரியவந்தால், அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண் டும். சம்பந்தப்பட்ட நபர், ஐ.எஸ்.ஐ., முத்திரையுடன் கூடிய, புதிய ஹெல்மெட் வாங்கி வந்த பின், அவரிடம் வாகனத்தை ஒப்படைக்க வேண்டும். போலீசார் காலை, 7:00 மணிக்கு பணிக்கு வரும் போது, 'ஹெல்மெட்' அணிந்து வந்ததை, உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தது தெரியவந்தால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நாள், ஆப்சென்ட்' போட வேண்டும். சாலையில், போலீசார் ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்றால், அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/police-personnel-who-ride-vehicles-without-wearing-a-helmet-will-be-marked-absent-for-the-day



