தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து அதிமுக-வில் முக்கியப் பதவிகளில் இருந்த சிலர் அங்கிருந்து விலகி தவெகவில் சேர்ந்து வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. எம்.எல்.ஏ க்களாக இருந்த விஜயபாஸ்கர்கள் தொடங்கி கட்சியில் பொறுப்பு வகித்த பலரும் வரிசையாக பனையூர் போய்க் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் எம்.ஜி.ஆர், அதிமுகவைத் தொடங்கிய போது அவருக்குப் பக்கபலமாகவும் கட்சியின் முதல் அமைப்புச் செயலாளராகவும் கட்சியின் ஆரம்ப கால அதிகாரபூர்வ நாளேடான `தென்னகத்தின்' ஆசிரியராகவும் இருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ கிருஷ்ணசாமியின் மகனும் ஜெயலலிதா காலத்தில் அம்மா பேரவையில் பொறுப்பு வகித்தவருமான கே்.ஏ.கே முகில் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு 'புரட்சித் தலைவர்' என்ற பட்டத்தை கே.ஏ. கிருஷ்ணசாமி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில். ‘அம்மா திடீரென ஒருநாள் என்னை அழைத்து ’உன்னை எம்.ஜி,ஆர் இளைஞரணி செயலாளராக நியமிக்கிறேன். உன் தந்தை கட்சியிலும் மக்களிடத்திலும் நன்மதிப்பை பெற்றவர், அவர் பெயரைக் காப்பாற்றும் விதத்தில் சிறப்பாக செயல்பட்டு மக்கள் பணி ஆற்ற வேண்டுமென அந்த உத்தரவைத் தந்தார். அவரது மறைவுக்குப் பின் தங்களது தலைமயின் கீழ் அரசியல் பொறுப்புகளைத் தொடர்ந்தேன். தற்போது கட்சியிலிருந்து விலகும் பொறுப்பை என் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் எடுக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன் முதல்வர் விஜய்யை சந்தித்து வந்த முகிலும் லயோலாவில் விஜய் படித்த போது உடன் படித்தவராம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/former-minister-k-a-krishnasamy-son-mukil-left-from-aiadmk




