வாய் சிவப்பதற்காக பயன்படுத்தக்கூடிய வெற்றிலையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. வெற்றிலை கொடி வகையை சேர்ந்தது. வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'சி' அதிகம் உள்ளன. வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்துகிறது. ஆரோக்கிய நன்மை இந்தியாவில், திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளின் போது, கடவுளுக்கு வெற்றிலைப் படைக்கப்படுகிறது மற்றும் மரியாதைக்கான அடையாளமாக வயதானவர்களுக்கும் வெற்றிலைக் கட்டு கொடுக்கப்படுகிறது. இந்த பளபளப்பான, இதய வடிவிலான இலைகளில் மறைந்துள்ள பெரிய அளவிலான ஆரோக்கிய நன்மைகளை நாம் பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். தாய்ப்பால் சுரப்பி 2 ஸ்பூன் வெற்றிலை சாறுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டுவர நரம்புகளுக்கு பலம் கிடைக்கும். உடலுக்கு வெப்பம் தரும் வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்குகிறது. வெற்றிலையை போடுவதால் ஈறுகளில் இருக்கின்ற வலி, ரத்த கசிவை நீக்கி, பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார் செய்கிறது. பலர் பலமான விருந்துக்குப் பிறகு வெற்றிலை போடுவர், சிலர் அடிக்கடி வெற்றிலைப் போடுவதை ஒரு பழக்கமாகவே வைத்திருப்பர். இந்தியாவில் மத சடங்குகளின் போது வெற்றிலை குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கிறது. ஞாபக சக்தி வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது. வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது. நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்து வந்தால் ஞாபக சக்தியை அதிகரிக்கும். முடி உதிர்வு பிரச்சினை தீர்வு வெற்றிலையைத் தொடர்ந்து பயன்படுத்துவது முடி வேகமாக வளர உதவுகிறது. வெற்றிலையைத் தொடர்ந்து பயன்படுத்தினால், முடி உதிர்வு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம். மேலும், அவை முடியின் பொலிவை அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரவும் உதவுகிறது. வெற்றிலையின் சிகிச்சை பண்புகள் அரிப்பு, பொடுகு மற்றும் தலைமுடி வெடிப்புகளுக்குச் சிகிச்சையளிக்க உதவுகிறது. உடல் எடை குறையும் அளவோடு வெற்றிலை சாப்பிட்டு வந்தால், ஆண்மை குறைபாடு நீங்கும். வெற்றிலை வாய் துர்நாற்றத்தை போக்கும். வெற்றிலை சாற்றுடன் தேவையான அளவு நீர் மற்றும் பால் கலந்து பருகிவந்தால், சிறுநீர் நன்றாக பிரியும். கடுகு எண்ணெயில் வெற்றிலையை போட்டு சூடுபடுத்தி ஒரு துணியில் வைத்து மார்பில் கட்டினால், மூச்சுத்திணறல் மற்றும் இருமல் கட்டுப்படும். 2 வெற்றிலையில் 5 மிளகு வைத்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு சாறை மட்டும் விழுங்கிவிட வேண்டும். இதேபோல் இரண்டு மாதங்கள் வரை செய்துவர உடல் எடை குறையும். வலி நிவாரணி வெற்றிலை ஒரு சிறந்த வலி நிவாரணி, இது வலியிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. வெட்டுக்கள், சிராய்ப்புகள், சினப்புகள் காரணமாக ஏற்படும் வலியைப் போக்க இதைப் பயன்படுத்தலாம். கொழுந்து வெற்றிலையை பேஸ்ட் போல அரைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். வெற்றிலை சாறு உடலின் உள்ளே ஏற்படும் வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-medicinal-secrets-of-betel-leaves-health-benefits-that-many-people-dont-know-about




