சென்னை, சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சிவராஜின் 135-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் வெங்கடரமணன் ஆகியோர், அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:- "தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் விவகாரத்தில் கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடுதான் எங்கள் நிலைப்பாடும். எஸ்.ஐ.ஆர். வந்தபோது முதல் நாளிலிருந்தே தவெக எதிர்த்து வருகிறது. எஸ்ஐஆர்-ஐ நாங்கள் எதிர்க்கிறோம். அரசியலுக்காக போராட்டம் நடத்தி, அறிக்கை விடும் கட்சி தவெக அல்ல. எஸ்ஐஆர் என்கிற பெயரில் பல வாக்காளர்களின் பெயரை விட்டுவிட்டு சிறப்பு எஸ்ஐஆர் என்று கொண்டு வருவது ஏற்புடையது அல்ல. காங்கிரஸ் கட்சியும், தவெகவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்.எஸ்.ஐ.ஆர். மட்டும் இல்லை என்றால் தவெக இன்னும் தனிப்பெரும்பான்மையுடன் ஜெயித்திருக்கும். நிறைய தொகுதிகளில் வென்று இன்னும் நிறைய ராஜ்மோகன்கள் அமைச்சர்களாக வந்திருப்பார்கள். தமிழிசை சவுந்தரராஜன்போன்று நிறைய பெண்களும் வந்திருப்பார்கள். அதனால், எஸ்ஐஆர் என்பது பெரிய மோசடி தான். இடைத்தேர்தலில் விசில் சின்னம் மாபெரும் வெற்றி பெறும். தமிழக அமைச்சரவையில் மாற்றம் குறித்து கேட்கிறீர்கள். இணையதளத்தில் ஊகங்கள் இதுபோன்று பல வரும். எங்கள் தளபதி எங்களுக்கு பார்த்துப்பார்த்து பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் மக்கள் பணிசெய்து வருகிறோம். அமைச்சரவை மாற்றம் குறித்து முதல்-அமைச்சர் விஜய்தான் இறுதி முடிவு எடுப்பார். "தாய், தந்தையுடன், மனைவியுடன் இருப்பதுதான் தலைவனுக்கு அழகு. ஆனால், முதல்வர் அப்படி இல்லை" என எடப்பாடி பழனிசாமி, முதல்-அமைச்சர் விஜய் குறித்து பேசியது தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "நாகரிக அரசியலைப் பேச வேண்டும் தனிநபரை, தனிநபரின் குடும்பங்களை இழுப்பது நாகரிகமான அரசியல் கிடையாது. எங்களை பொறுத்தவரையில் யார் எங்கள் மீது கற்களை எடுத்து வீசினாலும். நாகரீக அரசியலில் பயணிக்கத்தான் எங்கள் தலைவர் சொல்லிக்கொடுத்திருக்கிறார். " என அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/dragging-an-individuals-family-into-the-fray-is-not-civilized-politics-rajmohans-retort-to-edappadi




