சென்னை, நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், திரையரங்குகளில் 50 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 50 நாட்களை கடந்த ‘கருப்பு’ ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழகம் மட்டுமல்லாமல் பல இடங்களிலும் வசூல் சாதனை படைத்த இப்படம், சூர்யாவின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. திரிஷா, சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ரூ.350 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படும் இப்படம், 50 நாட்களாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.மேலும், ஓடிடி வெளியீட்டுக்குப் பின்பும் சில திரையரங்குகளில் கணிசமான ரசிகர்களும் படத்தைப் பார்க்க வருகின்றனர். இந்த நிலையில், ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்கங்களில் 50 நாளை நிறைவு செய்துள்ளது. இதனைக் குறிப்பிட்டு ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்ப நிறுவனம், மாபெரும் வெற்றி என ‘கருப்பு’ சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/karuppu-movie-completed-its-50th-day




