‘அருள்வான்’ படத்தின் இரண்டாம் பாடலான ‘வேல் செவ்வேல்’ பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அருள்நிதி. இவர் 'வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13, டிமாண்டி காலனி 2' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதனிடையே, தகராறு, வீர சிவாஜி, தேன் படங்களை இயக்கியவர் கணேஷ் விநாயக். இவரது இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அருள்வான்’. ரம்யா பாண்டியன், காளிவெங்கட், ஆரவ், கிருத்திகா மற்றும் ஜான்விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 2013 ஆம் ஆண்டு வெளியான 'தகராறு' படத்திற்குப் பிறகு, அருள்நிதி மற்றும் கணேஷ் விநாயகம் இந்த படத்தின் மூலமாக மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. ‘90 பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் மற்றும் இதர பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. ‘அருள்வான்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாளது. ‘அல்லிபூவே’ பாடலை யுகபாரதி வரிகளில் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து பாடியுள்ளார். ‘அருள்வான்’ படத்தின் டிரெய்லரை நடிகர சூர்யா சமீபத்தில் வெளியிட்டார். மலைக்கிராமத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வையும், அங்குள்ள சிறுமியின் கல்வி தொடர்பான வலியையும் பேசும் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது. சென்சார் சர்டிபிகேட் தணிக்கை வாரியம் ‘அருள்வான்’ படத்திற்கு ‘யு/ஏ’ சர்டிபிகேட் வழங்கியுள்ளது. 13 வயதிற்கு மேற்பட்டோர் இந்த படத்தினை தியேட்டர்களில் கண்டு ரசிக்கலாம். இப்படம் வருகிற 17-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றது. மலைக்கிராமத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வையும், அங்குள்ள சிறுமியின் கல்வி தொடர்பான வலியையும் பேசும் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘அருள்வான்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘வேல் செவ்வேல்’ வெளியாகியுள்ளது. மது பாலகிருஷ்ணன், அஸ்வின் சத்யா பாடிய இப்பாடலை எஸ். ஞானகராவேல் எழுதியுள்ளார். இத்திரைப்படம் ஜூலை 17 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. A powerful celebration of faith, devotion, and Murugan's divine grace. ❤️⚔️#VelSevel from out now! — 90 pictures (@90picturesprod) July 13, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/arulnidhis-arulvaan-film-vel-sevvel-song-out




