சிவகாசி, சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:- தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் அ.தி.மு.க.வினர். தற்போது ஆட்சியில் உள்ள கட்சி நேற்று முளைத்த காளான். இதை அ.தி.மு.க.வினர் ஊதி தள்ளிவிடுவார்கள். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. நிர்வாகிகளும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கடுமையாக தேர்தல் பணியாற்றினார்கள். ஆனால் இந்த தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர் த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். த.வெ.க.வுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்றால் அந்த கட்சி தமிழகத்தில் 150 இடங்களில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு முழு வெற்றி கிடைக்கவில்லை. இந்த வெற்றி நிலையான வெற்றி கிடையாது. த.வெ.க.வினர் ஆசைவார்த்தை கூறி மாற்று கட்சி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் அழைக்கிறார்கள். இதற்கு ஆசைப்பட்டு சிலர் இங்கிருந்து சென்றுவிட்டார்கள். அவர்கள் சென்றதால் அ.தி.மு.க. அழிந்து விடுமா? அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறியவர்கள் விரைவில் தாய் கழகமான அ.தி.மு.க.வில் இணைவார்கள். முதல்-அமைச்சர் பதவியில் உள்ள விஜய், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கன்னியகுறைவாக பேசக்கூடாது. மு.க.ஸ்டாலினுக்கு எப்போது கோபம் வருகிறதோ? அப்போது தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி இருக்காது. அவருக்கு கோபம் வரணும். வரும். அதுவரை உங்கள் ஆட்சி நீடிக்கும். முதல்- அமைச்சர் விஜய் கரூரில் பேசியதை மக்கள் ரசிக்கவில்லை. தமிழகத்தை பல முதல்-அமைச்சர் ஆட்சி செய்துள்ளார்கள். அவர்கள் இப்படி நடந்து கொள்ளவில்லை. ஆனால் விஜய் கரூரில் நடந்து கொண்ட விதம் வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-mk-stalin-get-angry-then-there-will-be-no-tvk-government-rajendra-balaji




