அங்காரா, துருக்கியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே அமைந்துள்ள நாடு துருக்கி. இந்நாட்டில் பல்வேறு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. துப்பாக்கி சூடு - 3 பேர் பலி இந்நிலையில், துருக்கியின் இஸ்தான்புல் மாகாணம் பைதா மாவட்டத்தில் அந்நிய செலவாணி பரிமாற்ற அலுவகம் (கரன்சி எக்ஸ்சேஞ்ச் அலுவலகம்) செயல்பட்டு வருகிறது. இந்த அலுவகத்தில் வெளிநாட்டு பணத்தை வாடிக்கையாளருக்கு உள்நாட்டு பணமாக பரிமாற்றம் செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்த அலுவகத்தில் இன்று வாடிக்கையாளருக்கும், அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். இந்த துப்பாக்கி சூடு குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று காயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/shooting-in-turkey-3-killed




