மகாராஷ்டிர, மூன்று நடிகர்களின் பதில்களையும் பெற்றுள்ள மகாராஷ்டிர FDA, அவர்களின் விளக்கங்களை பரிசீலித்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. விமல் ஏலக்காய் விளம்பர விவகாரம் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் நடித்திருந்த ‘விமல் ஏலக்காய்’ விளம்பரம் தொடர்பான விவகாரம் தற்போது அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. இந்த விளம்பரம், தடை செய்யப்பட்ட விமல் பான் மசாலாவை மறைமுகமாக விளம்பரப்படுத்துவதாக மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) குற்றம்சாட்டியிருந்தது. மூன்று நடிகர்களுக்கும் நோட்டீஸ் கடந்த ஆகஸ்ட் 11-ந்தேதி மூன்று நடிகர்களுக்கும் அனுப்பப்பட்ட நோட்டீசில், ‘விமல் ஏலக்காய்’ விளம்பரத்தில் நடிகர்கள் பங்கேற்றது குறித்து விளக்கம் கேட்டிருந்தது. விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்ட விமல் பிராண்ட் பெயர் மற்றும் அதன் காட்சிப்படுத்தல், விமல் பான் மசாலாவை மறைமுகமாக விளம்பரப்படுத்துகிறதா என்பதையும் விளக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், நடிகர்களின் ஒப்பந்தங்கள், விளம்பரத்துக்கான விவரங்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் உள்ளிட்ட விவரங்களை அதில் கேட்கப்பட்டிருந்தது. நடிகர்கள் பதில் இந்த விவகாரம் தொடர்பாக ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் ஆகிய மூவரும் நோட்டீசுக்கு பதில் அளித்துள்ளனர். மேலும், மூவரில் இருவர் தங்களது தரப்பு விளக்கத்தை நேரில் தெரிவிக்க விசாரணைக்கு அழைக்குமாறு கோரியிருந்ததாகவும், அந்த இரண்டு விசாரணைகளும் முடிவடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மூன்று நடிகர்களின் பதில்களையும் பெற்றுள்ள மகாராஷ்டிர FDA, அவர்களின் விளக்கங்களை பரிசீலித்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/vimal-cardamom-surrogate-advertising-issue-shah-rukh-khan-ajay-devgn-and-tiger-shroff-respond




