மேற்கு வங்காளத்தில் உள்ள ஹவுரா நகரையும், கொல்கத்தா நகரையும் ஹூக்ளி நதியின் குறுக்கே இந்தப் பாலம் இணைக்கிறது. இந்த பாலம் ஹவுரா ரயில் நிலையம் அருகே இருப்பதால், தினசரி பயணிகளுக்கும் நகரின் வர்த்தகப் போக்குவரத்துக்கும் இது முக்கியமான இணைப்பாக உள்ளது. பிடித்த நிறத்தில் ஒளிரும் பாலம் கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஹவுரா பாலம் உங்களுக்கு பிடித்த நிறத்தில் ஒளிர்ந்தால் எப்படி இருக்கும்? பொதுமக்களுக்கும் அப்படி ஒரு வாய்ப்பை வழங்கத் திட்டமிட்டுள்ளனர் ஹவுரா பாலத்தை நிர்வகிக்கும் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுக நிர்வாகத்தினர். ஆம். இனி ஆண்டுக்கு 10 நாட்கள், பொதுமக்கள் தங்களுக்குப் பிடித்த வண்ணங்களைத் தேர்வு செய்து ஹவுரா பாலத்தை ஒளிரச் செய்ய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அதுமட்டு மின்றி, அவர்கள் விரும்பும் பாடல் அல்லது குரல் பதிவையும் தேர்வு செய்யலாம். ஹவுரா பாலம் நீங்கள் தேர்ந்தெடுத்த வண்ணங்களில் ஒளிரும்போது, நீங்கள் விரும்பிய பாடல் அல்லது குரல் பதிவு மில்லினியம் பூங்காவில் ஒலிக்கும். செல்போன் செயலி மூலமும் அதைக் கேட்க வசதி செய்யப்பட உள்ளது. மேலும், சுதந்திர தினம், துர்க்கா பூஜை உள்பட முக்கிய நிகழ்வுகளுக்காக ஆண்டுக்கு 50 ' நாட்கள் பாலம் அந்தந்த நிகழ்வுக்கு ஏற்ற வண்ணங்களில் அலங்கரிக்கப்படும். அதற்கேற்ற இசையும் ஒலிபரப்பப்படும். இந்த 50 நாட்களில் பொதுமக்களுக்கான தனிப்பட்ட முன்பதிவு இருக்காது. துர்க்கா பூஜையிலிருந்து இந்தப் புதிய வசதியைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவை இலவசமா அல்லது கட்டணமா என்பது விரைவில் முடிவு செய்யப்படும். தினமும் எத்தனை பேர் இந்தப் பாலத்தை கடக்கிறார்கள்? இதுதான் ஹவுரா பாலத்தின் மிகப்பெரிய சுவாரஸ்யங்களில் ஒன்று. மேற்கு வங்க அரசின் சுற்றுலாத்துறை தகவலின்படி, தினசரி சுமார் 1 லட்சம் வாகனங்களும் 1.5 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்களும் பாலத்தை பயன்படுத்துகின்றனர். இது ஒரு வரலாற்றுச் சின்னமாக இருந்தாலும், இன்றும் நகரத்தின் அன்றாட போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/kolkatas-howrah-bridge-changes-colorhow-did-you-know




