2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் வெற்றியைப் பெற்றது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தைப் போலவே மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் சிறப்பு தோற்றங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்தது. நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ முதல் பாகத்தின் தோற்றத்திலேயே நடிக்கிறார். முத்துவேல் பாண்டியன் என்கிற ஜெயிலர் அதிகாரி தன் மகனைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளுடன் கூடிய எமோஷனலான கதையாக முதல் பாகம் எடுக்கப்பட்டிருந்தது. தற்போது, ‘ஜெயிலர் 2’ திரைப்படமும் முத்துவேல் பாண்டியன் சந்திக்கும் அடுத்த பிரச்னைகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது. ‘ஜெயிலர் 2’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீட்டு பணிகளும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைதளப் பக்கங்களில், இன்று மாலை 6.00 மணிக்கு 'ஜெயிலர் 2' தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று இன்று காலை அறிவித்திருந்தது. ‘ஜெயிலர் 2’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. ‘ஒன் நேம்’ ஆடியோ ட்ராக் இந்த நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தின் அறிவிப்பு டீசரில் இடம்பெற்றிருந்த ‘ஒன் நேம்’ ஆடியோ ட்ராகை படக்குழு வெளியிட்டுள்ளது. One name to rule the game!☝ is streaming now on your favorite audio platforms! ⚡ … — Sun Pictures (@sunpictures) July 3, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/jailer-2-movies-one-name-audio-track-out




