சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- மூன்று மணி நேர நுழைவுத்தேர்வு ஒரு மாணவனின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது! முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே. அசோக் வர்தன் ஷெட்டி எழுதியுள்ள கட்டுரை, நீட் (NEET), சியுஇடி (CUET) போன்ற மத்தியதர நுழைவுத்தேர்வுகள் மாநில சுயாட்சியை எவ்வாறு நசுக்குகின்றன என்பதை மிகத் துல்லியமாக அம்பலப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 80,000 மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு மற்றும் சிகாகோ பொதுப் பள்ளிகளின் ஆய்வுகளின்படி, ஒரு மாணவனின் கல்லூரிப் படிப்பின் வெற்றிக்கு நுழைவுத்தேர்வு மதிப்பெண்களை விட அவனது பள்ளி GPA மதிப்பெண்கள் 4 மடங்கு அதிக துல்லியமான கணிப்பைக் கொடுக்கின்றன என்பதை உலகளாவிய தரவுகளுடன் கட்டுரை நிருபிக்கிறது. இந்த ஒற்றைச் சாளர முறை, மாநில கல்வி வாரியங்களின் உரிமைகளைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்குக் கிடைக்காத மிக விலையுயர்ந்த பயிற்சி மையங்களுக்கு (Coaching Centers) மட்டுமே சாதகமாக அமைந்து, கல்வித் துறையை ஒரு வணிகக் கூடமாக மாற்றுகிறது. சத்ரோன் கி கூஞ்ச் மத்திய பாஜக அரசின் இந்த பிடிவாதமான, மத்தியமயமாக்கப்பட்ட கொள்கையானது பிராந்திய பன்முகத்தன்மையை முற்றிலும் புறக்கணிக்கிறது. இதனால்தான், நமது தலைவர் ராகுல் காந்தி அவர்களின் "சத்ரோன் கி கூஞ்ச்" இயக்கம் நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் குரலாக ஒலிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 89 வினாத்தாள் கசிவுகளும், 48 மறுதேர்வுகளும் நடந்து 6.5 கோடிக்கும் அதிகமான மாணவர்களின் எதிர்காலம் பாழாக்கப்பட்டுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் 40 விழுக்காட்டை கல்விக்காக மட்டுமே செலவிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மாணவர்களைக் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் இந்த தன்னிச்சையான கல்வி முறையை ஒழிக்கவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். தமிழக மாணவர்களின் நலனைக் காக்கவும், கல்வி உரிமைகளை மீட்டெடுக்கவும் மாநில சுயாட்சியுடன் கூடிய, மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வி முறையே தற்போதைய அவசரத் தேவை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-three-hour-entrance-exam-cannot-decide-a-students-future-manickam-tagore




