சென்னை, தலைமைச்செயலகத்தில் சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை திமுக சட்டமன்ற கொறடா எ.வ.வேலு உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். உரிமை மீறல் புகார் மிசா தொடர்பாக முதல்-அமைச்சர் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரி ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுவின் நிலை குறித்து அவர்கள் சபாநாயகரிடம் கேட்டறிந்தனர். மேலும், சட்டசபையில் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்ததாகக் கூறி சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கு எதிராக திமுக சார்பில் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.எல்.ஏ.க்கள், சட்டசபையில் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமானவரை அவதூறாக பேசுவது விதிமீறல் என்றும், சட்டசபையில் இல்லாதவர்கள் குறித்து பேசுவதும் விதிப்படி தவறு என்றும் தெரிவித்தனர். மிசா தொடர்பான முதல்-அமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரி ஏற்கனவே மனு அளித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர். அடுத்தகட்ட நடவடிக்கை உரிமை மீறல் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், புகார் குறித்து ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிவித்த அவர்கள், சட்டசபையில் தவறான தகவல்களை பகிர்ந்துகொள்வது விதிமீறல் என்றும் குற்றம்சாட்டினர். மேலும், “இல்லாதது பொல்லாதவற்றை பேசி திசை திருப்பும் அரசியலில் தவெக அமைச்சரவை ஈடுபடுகிறது” என்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-of-violation-of-rights-against-minister-nirmal-kumar-dmk-mlas-who-met-the-speaker




