Full Article
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வந்த சென்னை பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள அரசு பங்களாவான ‘செவ்வந்தி இல்லம்’ வீட்டை காலி செய்து, ராயப்பேட்டையில் அதிமுக தலைமையகத்திற்கு அருகிலுள்ள தனது புதிய இல்லத்தில் இன்று முழுமையாக குடியேறியுள்ளார். 2011-ஆம் ஆண்டு முதன்முறையாக அமைச்சராக பதவியேற்றதிலிருந்து செவ்வந்தி இல்லத்தில் வசித்து வந்த எடப்பாடி பழனிசாமி, 2017 முதல் 2021 வரை தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த காலத்திலும் அதே இல்லத்தை தனது முகாம் அலுவலகமாக பயன்படுத்தி வந்தார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தின் அடிப்படையில் அரசு ஒதுக்கிய இல்லமாக செவ்வந்தி இல்லத்திலேயே தொடர்ந்து வசித்து வந்தார். எடப்பாடி பழனிசாமி ஆனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் இழந்ததால், அரசு ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட செவ்வந்தி இல்லத்தை காலி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, ராயப்பேட்டையில் அதிமுக தலைமையகத்திற்கு அருகே அமைந்துள்ள புதிய இல்லத்தில் கடந்த மாதம் பால் காய்ச்சிய எடப்பாடி பழனிசாமி, இன்று அங்கு முழுமையாக குடியேறியுள்ளார்.! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Full article — see link below



