சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டியை வெற்றிகரமாக நடத்த ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். சென்னை ஓபன் டென்னிஸ் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் 3-வது சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நுங்கம்பாக்கத் தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நவம்பர் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்கிறது. 250 தரவரிசை புள்ளி வழங்கும் இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடி களும் பங்கேற்கிறார்கள். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து நடத்தும் சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டியை வெற்றிகரமாக நடத்துவது குறித்து முதல்-அமைச்சர் விஜய்யை, தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ், முதன்மை செயல் அதிகாரி ஹில்டன் ஜோஷி, போட்டி ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த், செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் நேற்று சந்தித்து ஆலோனை நடத்தினர். அப்போது போட்டியை நடத்த அரசு சார்பில் நிதியதவி அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர். ரூ.10 கோடி நிதியுதவி கோரிக்கையை ஏற்று சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியை சிறப்பாக நடத்திடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். இந்த சந்திப்பின்போது விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர் ஜுனா, தலைமைச் செயலாளர் சாய்குமார், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைச் செயலாளர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை ஓபன் பெண்கள் போட்டியை சிறப்பாக நடத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த போட்டியானது தமிழ்நாட்டை உலக விளையாட்டு அரங்கில் மேலும் உயர்த்துவதுடன், விளையாட்டு சுற்றுலாவை ஊக்கு வித்து, இளம் வீரர், வீராங்கனைகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் நடத்தப்பட உள்ளது. சர்வதேச தரத்திலான விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்துவ தன் மூலம், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மையமாக தமிழ்நாட்டை உருவாக்கவும், விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தவும், இளம் தலை முறையினருக்கு சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது. 2026 சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் (WTA -250) போட்டி நடத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு#CMJosephVijay | | |@imrajmohan | — TN DIPR (@TNDIPRNEWS) August 4, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/tennis/financial-assistance-of-rs10-crore-to-host-the-chennai-open-womens-tennis-tournament




