வாஷிங்டன், உக்ரைன்-ரஷியா போர் ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரஷியா போர் தொடுத்தது. இந்த போர் இன்னும் நீடித்து வருகிறது. உக்ரைன்-ரஷியா இடையிலான போரை விரும்பாத அமெரிக்க அதிபர் டிரம்ப், போரை நிறுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறார். போர் நடத்த ரஷியாவுக்கு நிதி ஆதாரமாக இருப்பது அதன் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவை ஆகும். எனவே, ரஷியாவிடம் இருந்து பிற நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை தடுத்துவிட்டால், ரஷியாவுக்கு போர் நடத்தத் தேவையான நிதி கிடைக்காது என்று டிரம்ப் கணக்கு போட்டார். ரஷியா மீது பொருளாதார தடை விதித்ததுடன், ரஷியாவிடம் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதிகமான வரி விதித்து வருகிறார். புதிய மசோதா அந்த வகையில், ரஷிய எண்ணெயை வாங்கும் இந்தியா, சீனா மீது 100 சதவீதம் கூடுதல் வரி விதிக்க கோரும் புதிய மசோதா அமெரிக்க செனட் சபையின் நடைமுறை வாக்கெடுப்பில் (Procedural Vote) நிறைவேறியுள்ளது. 'Lindsey O.Graham Sanctioning Russia and Iran Act of 2026' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா, ரஷியாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்குகிறது. 100 சதவீதம் கூடுதல் வரி அமெரிக்கா சென்ற உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி முன்னிலையி கொண்டுவரப்பட்ட இம்மசோதா, அமெரிக்காவின் இரு கட்சிகளின் ஆதரவுடன் சட்டமாவதற்கான முதல் படியை எட்டியுள்ளது. இந்த மசோதா ரஷிய மீதான பொருளாதார தடைகளை அதிகரிப்பதோடு, ரஷியவிடம் இருந்து கச்சா எண்ணெய், கேஸ் உள்பட வர்த்தக ரீதியாக பிற பொருட்களை வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் கூடுதல் வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு வழங்க உள்ளது. இந்த மசோதா தான் தற்போது இந்தியாவுக்கும், சீனாவிற்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த மசோதா அமெரிக்காவில் சட்டமாக்க வேண்டும் என்றால் பல்வேறு கட்டங்களை தாண்ட வேண்டி உள்ளது. முதலில் செனட் அதன்பிறகு பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடக்கும். இந்த 2 சபைகளிலும் பெரும்பான்மையுடன் இந்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட வேண்டும். அதன்பிறகு அதிபர் டொனால்டு டிரம்பின் ஒப்புதலுக்கு செல்லும். அதன்பின்னர் அவர் அனுமதி வழங்கும்பட்சத்தில் வரி விதிப்பு தொடங்கும். இலக்கு வைக்கப்பட்ட நாடுகள் ரஷியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிகம் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகிய 5 நாடுகள் மீது 100% வரி விதிக்க இந்த மசோதா பரிந்துரைக்கிறது. ரஷியாவிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 500% வரை வரி விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு ஏற்படப்போகும் தாக்கம் 2022 உக்ரைன் போருக்குப் பிறகு, உலக அளவில் ரஷியாவிடமிருந்து மலிவு விலையில் அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்த மசோதா சட்டமானால், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 100% கூடுதல் வரி விதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஒவ்வொரு 180 நாட்களுக்கும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி (USTR) ரஷிய எண்ணெயை அதிகம் வாங்கும் நாடுகளின் பட்டியலை ஆய்வு செய்து வரிகளை மாற்றியமைப்பார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்திய சுத்திகரிப்பு ஆலைகளையும், இந்திய-அமெரிக்க இருதரப்பு வர்த்தக உறவையும் பெரிய அளவில் பாதிக்கும். ஐரோப்பிய நாடுகளுக்கு விலக்கு ரஷிய இயற்கை எரிவாயுவை 15%-க்கும் குறைவாக இறக்குமதி செய்யும் மற்றும் சார்புநிலையைக் குறைத்து வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த 100% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அணு உலைகள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக ரஷியாவிடமிருந்து 'யுரேனியம்' வாங்குவதற்கும், விண்வெளி ஆராய்ச்சி கூட்டமைப்பிற்கும் இந்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/us-accelerates-plan-to-impose-100-percent-tariff-on-india




