காஞ்சிபுரம், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சன்னதி தெருவில் ஸ்ரீ ஏலேல சிங்க விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 25-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அலங்காரம் இதையொட்டி, கோவில் சன்னதி முழுவதும் ரூ.1, ரூ.2, ரூ.5 மற்றும் ரூ.500 உள்ளிட்ட புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் இந்த அலங்காரத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தரிசனம் புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/devotional/from-rs1-to-rs500-vinayagar-adorned-with-new-currency-notes




