சவுத்தாம்டன், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் போட்டி மழையால் ரத்துசெய்யப்பட்ட நிலையில், எஞ்சிய 4 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 4-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் விளையாடிய இந்திய அணி, ஒரு தொடரை 4-0 என்ற கணக்கில் இழப்பது இதுவே முதல் முறையாகும். அதேபோல டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக வழிநடத்திய முதல் 7 போட்டிகளில் ஒரு வெற்றிகூட பெறாத முதல் இந்திய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் மோசமான சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில், டி20 தொடர் முடிவடைந்ததை தொடர்ந்து தரவரிசைப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி, தனது முதலிடத்தை இழந்தது. தொடர் வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி, இந்திய அணியை முந்தி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. டி20 தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி, கடந்த 1,601 நாட்களாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/consecutive-defeats-india-sets-a-dismal-record




