சென்னை, "நான் இப்போது சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் மிகவும் நெருக்கமாகிவிட்டேன். நான் மட்டுமல்ல, பெரும்பாலானோரும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் மூழ்கிக் கிடக்கிறோம்" என்று குறிப்பிட்டார். நடிகை சோபிதா துலிபாலா தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், நடிகை சோபிதா துலிபாலாவும் கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகும் இருவரும் தங்களது திரைப்பயணத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர். படப்பிடிப்பு பணிகளுக்கு மத்தியில் சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இருக்கும் சோபிதா துலிபாலா, அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். செயற்கை நுண்ணறிவு குறித்து சோபிதா இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சோபிதா துலிபாலா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் அதன் பயன்பாடு குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "நான் இப்போது சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் மிகவும் நெருக்கமாகிவிட்டேன். நான் மட்டுமல்ல, பெரும்பாலானோரும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் மூழ்கிக் கிடக்கிறோம்" என்று குறிப்பிட்டார். ‘எதுவுமே எல்லை தாண்டக்கூடாது’ தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு காரணமாக தங்களது அன்றாட வாழ்க்கையில் சில முக்கியமான விஷயங்களுக்கு கூட போதிய நேரம் ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில முக்கிய நிகழ்வுகளுக்கு கூட நேரம் ஒதுக்க முடியவில்லை. இது சரியா, தவறா என்பது வேறு விஷயம். ஆனால் எதுவுமே எல்லை தாண்டிச் செல்லக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்று அவர் கூறினார். ரசிகர்கள் கவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் பல்வேறு துறைகளில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதன் பயன்பாடு குறித்து சோபிதா துலிபாலா தெரிவித்துள்ள இந்த கருத்து கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, ஏ.ஐ. பயன்பாட்டுடன் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நேரம் ஒதுக்குவதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/we-are-immersed-in-ai-technology-actress-sobhita-dhulipala



