புதுடெல்லி, அமெரிக்கா உடனான வர்த்தக உறவுகளில் இருக்கும் நிச்சயமற்ற தன்மை, கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு(AI) மேம்பாடுகளில் இந்தியாவிற்கான பங்களிப்பு இல்லாதது போன்றவற்றால் முதலீட்டை ஈர்ப்பதில் இந்தியா கடுமையான சவால்களை சந்திக்கிறது என மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில் மத்திய நிதித்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது;- மொத்த உள்நாட்டு உற்பத்தி “நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில்(ஏப்ரல்-ஜூன்) மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) 7.8 என்ற வலுவான வளர்ச்சியை எட்டிய நிலையில், ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் பொருளாதார நடவடிக்கைகளின் போக்கு மிதமான வளர்ச்சியை சுட்டிக்காட்டுகிறது. செப்டம்பரில் ஏற்பட்ட எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மீதான அழுத்தம் காரணமாக சர்வதேச பொருளாதார சூழல் நமக்கு சாதமகற்றதாக மாறியுள்ளது. போட்டிக்கு உகந்த பொருளாதாரம் இந்திய பொருளாதாரத்தை வணிகத்திற்கு உகந்ததாக இருப்பதை விட, போட்டிக்கு உகந்ததாக மாற்ற வேண்டிய தேவை உள்ளது. ஒரு போட்டித்தன்மை வாய்ந்த பொருளாதாரம் மட்டுமே வெற்றிகரமான, புதுமையான மற்றும் உற்பத்தி சார்ந்த பொருளாதாரமாக மாறும். சவால்கள் அமெரிக்கா உடனான நிலையற்ற வர்த்தக உறவுகள், வரி அழுத்தங்கள், கச்சா எண்ணெய் விலை மற்றும் விநியோகம் தொடர்பான நிச்சயமற்ற தன்மை, உலகளாவிய செயற்கை நுண்ணறிவு(AI) மேம்பாடுகளில் இந்தியாவிற்கான பங்களிப்பு இல்லாதது மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதில் சர்வதேச அளவில் நிலவும் போட்டி ஆகியவை வளரும் நாடுகளுக்கு பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன. இதனால், மற்ற வளரும் நாடுகளைப் போலவே, இந்தியாவும் மூதலீட்டை ஈர்ப்பதில் கடுமையான சவால்களை சந்திக்கிறது. இருப்பினும், இந்த நிதியாண்டில் நேரடி அந்நிய முதலீட்டு வரவுகள் கடந்த ஆண்டை விட சிறப்பாகவே இருக்கும். உள்நாட்டு பொருளாதாரம் இந்த சவாலான சூழலில், உள்நாட்டு பொருளாதாரத்தின் வளர்ச்சி நமக்கு பெரிய பலமாக இருக்கிறது. கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சித் திறனை விரைவில் சர்வதேச முதலீட்டாளர்கள் கண்டுகொள்வார்கள். தற்போதைய சூழலில், குறுகிய கால வேலை உருவாக்கத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/india-faces-serious-challenges-in-attracting-investment-union-finance-ministry




