மதிமாறன் புகேந்தி இயக்கத்தில், சூரி நடிப்பில் வெளியான படம் 'மண்டாடி'. மீனவர்களின் வாழ்வியலையும், பாய்மரப் படகுப்போட்டியையும் மையமாகக் கொண்டு உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் படத்தைப் பார்த்த சூர்யா, சூரியை பாராட்டி வாழ்த்து கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார். சூர்யா சூர்யா அனுப்பி இருக்கும் கடிதத்தில், " சூரி, அட்டகாசம்! இந்த கேரக்டருக்காக எவ்வளவு மன உறுதியும் உடல் உறுதியும் தேவைப்பட்டிருக்கும்னு நினைச்சாலே பிரம்மிப்பா இருக்கு! உங்க வெற்றியைப் பார்த்து ரொம்ப ரொம்ப சந்தோஷம். 'மண்டாடி' வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்" என்று வாழ்த்தியிருக்கிறார். "டோரதி, பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார்கள்"- பாராட்டிய சூர்யா இதனைத் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்திருக்கும் சூரி, "சூர்யா அண்ணே, 'மண்டாடி' பார்த்துட்டு நீங்க அனுப்பிய பூங்கொத்தும், அன்பான வாழ்த்தும் ரொம்ப சந்தோஷமா இருக்கு! என் உழைப்பைப் புரிஞ்சு நீங்க சொன்ன வார்த்தைகள் மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கு. மண்டாடி இன்னும் நல்லா உழைக்கணும்னு தோணுது. என் வெற்றியை உங்க வெற்றியா நினைச்சு சந்தோஷப்படுற அந்த அன்புக்கு ரொம்ப நன்றி அண்ணே" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள. உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://cinema.vikatan.com/kollywood/suriya-congratulates-soori-for-mandadi-he-gets-emotional


