கவுகாத்தி: அசாமில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தின் 16 மாவட்டங்களில் மொத்தம் 5.64 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதிகளில் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி தொடர்ந்து ஓடுவதால், பல கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. சாலை மற்றும் ரயில் போக்குவரத்தும் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் பிற அவசரகால மீட்புக் குழுக்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் கனமழைக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அசாமில் வெள்ள நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/flood-havoc-in-assam-21-people-lose-their-lives-in-a-single-day




